இராணுவத் தளபதி விசேட இப்தார் நிகழ்வில் பங்குபற்றல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 11 கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார். புனித ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு நோன்பதனை குறிக்கும் வகையில் இந்த விழா அமையப்பட்டது.

இந்த நிகழ்வு இலங்கை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் மேஜர் ஜெனரல் எம்.ஆர் ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சர்வதேச மாணவ அதிகாரிகள், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், அனைத்து படைப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து படையினரும் கலந்து கொண்டனர்.