பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களும் கற்றல் உபகரணங்களும் வழங்குதல்

58 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் புத்தளம் மொரபத்தாவ பாடசாலை, காட்டுபுளியன் ஆரம்ப பாடசாலை மற்றும் மொரபத்தாவ பாடசாலைகளை சேர்ந்த 51 பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் நன்கொடை நிகழ்வு 2025 ஆகஸ்ட் 07 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்ஏ அபேயவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நடத்தப்பட்டது, மேலும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் 85 வது குழுவினரால் இந்த நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.