15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு

51 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 511 வது காலாட் பிரிகேட் மேற்பார்வையில் 2025 ஆகஸ்ட் 08 அன்று மயிலங்காடு ஏழாலை (தெற்கு) பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டை 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் நிர்மாணித்தனர்.

வீட்டை கையளிக்கும் நிகழ்வில் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) தலைமையிலான ஒருங்கிணைப்பு முயற்சிகளுடன், வண. எஸ். வெஸ்லி அரியராஜாவின் மற்றும் வன்னி எய்ட் கனடாவின் நிதி பங்களிப்பின் மூலம் கட்டுமான பணி சாத்தியமானது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.