சிவில் பணிகள்
9 வது விஜயபாகு காலாட் படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
9 வது விஜயபாகு காலாட் படையணியினால் சிறிமங்களபுரத்தில் உள்ள தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு 2025 ஜூலை 04 அன்று வீட்டின் சாவி பயனாளியிடம் வழங்கப்பட்டது.
12 வது காலாட் படைப்பிரிவு படையினரால் இரத்த தானம்
2025 ஜூலை 05 ம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
காயமடைந்த யானை 'பாத்தியா'வுக்கு சிகிச்சையளிக்க இராணுவத்தினால் உதவி
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவெரட்டிய மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த பாத்தியா என்ற காட்டு யானை, சமீபத்தில் நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றல்
2025 ஜூலை 01, அன்று கண்டி, சுவர்ணமாலி மகளிர் கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசிஎம்ஜிஎஸ்டி கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
7 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் புனானி பகுதியில் ஒரு தேவையுடைய குடும்பத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய வீட்டைக் கட்டி 2025 ஜூன் 29 அன்று வழங்கினர்.
74 வது உபசம்பத்தா விழாவிற்கு முன்னதாக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கள விஜயம்
2025 ஜூன் 30 முதல் ஜூலை 06 வரை கல்னேவ வித்யாதர விகாரையில் நடைபெறவிருக்கும் இலங்கை ராமண்ணா மகா நிகாயவின் 74 வது உபசம்பத்தா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ 2025 ஜூன் 24 அன்று கள விஜயம் மேற்கொண்டார்.
9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் நன்கொடை திட்டம் 2025-06-27
9 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 24, அன்று சிறிமங்கலபுரம் கந்தளாய் காமினி ஆரம்ப பாடசாலையில் 46 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் நூலகப் புத்தகங்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை இராணுவம் வருடாந்த பாத யாத்திரையில் பக்தர்களுக்கு ஆதரவு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவப் படையினர் 2025 ஜூன் 20 முதல் 2025 ஜூலை 04 வரை உகந்தையில் இருந்து கதிர்காமம் வரை வருடாந்த பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
11 வது (தொ) இலங்கை சிங்க படையணியினால் நன்கொடைத் திட்டம்
11 வது (தொ) இலங்கை சிங்க படையணி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2025 ஜூன் 23 ஆம் திகதி கொக்கடிச்சோலையில் மதிய உணவு மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை நடாத்தியது. 243 வது காலாட் பிரிகேட் தளபதி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
51 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் நன்கொடை வழங்கும் திட்டம்
51 வது காலாட் படைப்பிரிவு, 512 வது காலாட் பிரிகேட் மற்றும் 14 வது கஜபா படையணி ஆகியவற்றின் படையினர், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் நமசிவாய வித்தியாலயத்தில் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.