12 வது கெமுனு ஹேவா படையணியினால் உலர் உணவு விநியோகத் திட்டம்

12 வது கெமுனு ஹேவா படையணி 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி தலுகானா கிராம சேவகர் பிரிவு அலுவலகத்தில் 80 எளிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தியது.

இந்த நிகழ்விற்கான பிரதான அனுசரணையை ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் குமுது பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் துணைவியார் திருமதி ஷிரோமி மசகோரல அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்வு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.