சிவில் பணிகள்
11 வது (தொ) சிங்க படையணியினால் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டம்
241 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 11 வது (தொ) சிங்க படையணி 2025 ஜூன் 18 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.
ஒட்டுச்சுட்டான் சிவன் கோவில் வருடாந்த உற்சவதிற்கு முன்னதாக 14 வது கெமுனு ஹேவா படையினரால் சிரமதான திட்டம்
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்கவும், 59 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் 2025 ஜூன் 21 ஆம் திகதி சிரமதான திட்டத்தை மேற்கொண்டனர். இந்த முயற்சி 592 வது காலாட் பிரிகேடினால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒட்டுசுட்டானில் உள்ள சிவன் கோவிலில் நடைபெறவிருக்கும் வருடாந்த விழாவிற்கு தயாராகும் வகையில் வளாகத்தை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தியது.
காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க கிழக்கு பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கை
வளர்ந்து வரும் மனித-யானை மோதலைத் தணிக்கும் முயற்சியாக, கிழக்கு பாதுகாப்புப் படையினர் 7 வது இலங்கை பீரங்கி படையணி, 12 வது கெமுனு ஹேவா படையணி, 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து 2025 ஜூன் 19 ஆம் திகதி மிவிதபுரத்திலிருந்து நுவரகலைக்கு 26 காட்டு யானைகளை விரட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மருதங்கேணி மருத்துவமனையில் 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் குருதி நன்கொடை
ஒரு குறிப்பிடத்தக்க சமூக சேவையாக, 2025.06.15 ஆம் திகதி மருதங்கேணி மருத்துவமனையில் இரத்த தான திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல், 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.என் பெர்னாண்டோ ஆர்எஸ்பீ மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜே.ஏ.சீ கருணாதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பில் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியினால் இரத்த தானத் திட்டம்
சமூக பொறுப்பு மற்றும் மனிதாபிமான சேவையின் குறிப்பிடத்தக்க செயலாக, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி 2025 ஜூன் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் இரத்த தானத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
1 வது இலங்கை ரைபள் படையணியின் படையினரால் நன்கொடை திட்டம்
இறந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 1 வது இலங்கை ரைபள் படையணியின் படையினர், பல்லேகலை பொது மக்களுக்கு 2025 ஜூன் 10 ஆம் திகதி 1 வது இலங்கை ரைபள் படையணியில் அரிசி வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தினர்.
7 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்
7 வது இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஜூன் 16 ஆம் திகதி ஆறுமுத்து புதுகுளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில், ஆறுமுத்து புதுகுளம் கிராமத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வை நடாத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, தேவையுடைய குடும்பங்களுக்கு 20 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி 7 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.கே.டி.பீ.பீ.கே. கங்கானி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் இரத்த தான திட்டம் ஏற்பாடு
வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 16 ஆம் திகதி பாலிநகர் முகாம் வளாகத்தில் இரத்த தானத் திட்டத்தை நடாத்தினர். 561 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்.எஸ்.பீ பண்டார யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.என்.டி டி சொய்ஸா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
5 வது (தொ) சிங்க படையணி மற்றும் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் பாடசாலை கட்டிடங்கள் புதுபிப்பு
தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 5வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் முல்லைத்தீவு சண்முகரத்னம் தமிழ் பாடசாலை மற்றும் ஒலுமடு தமிழ் பாடசாலையில் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டனர். மேலும் 59வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பாட்டு பாடசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
4 வது விஜயபாகு காலாட் படையினரால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி
இந்திய கடற்பகுதியில் எம்எஸ்சீ ஈஎல்எஸ்ஏ 3 கப்பல் கவிழ்ந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் கடற்பகுதியில் 4 வது விஜயபாகு காலாட் படையலகின் படையினர், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வேண்டுகோளிற்கு இணங்க ஆய்வு மற்றும் சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.