சிவில் பணிகள்
பதவி சிறுவர்கள் பேரணி – 2025
அனுராதபுரம், புனித ஜோசப் பேராலயத்தில் தர்ம கற்பித்தல் மற்றும் பைபிள் சேவை மையத்தால் ஆகஸ்ட் 8 முதல் 10 வரை ஏற்பாடு செய்யப்பட்ட 2025 பதவி சிறுவர்கள் பேரணியில், தரம் 6 முதல் 11 வரை சுமார் 450 மாணவர்களும், வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை சேர்ந்த 50 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியினரால் வன்கோல்பேஸ் ரெசிடன் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் வெடிகுண்டு மற்றும் (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) அச்சுறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டறை 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியில் 2025 ஜூலை 29 அன்று நடத்தப்பட்டது.
51வது காலாட் படைப் பிரிவினரால் தானம் வழங்கல்
51 வது காலாட் படைப்பிரிவினரால் 2025 ஜூலை 27ம் திகதி அன்று இருபாலை அன்னை தெரேசா முதியோர் இல்லம், புத்தூர் புனித லூகாஸ் மெதடிஸ்ட் முதியோர் இல்லம் மற்றும் உரும்பிராய் செல்வபுரம் உதய சூரியன் பாலர் பாடசாலை ஆகியவற்றில் தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குருநாகல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ 9 வது தேசிய பாதுகாவலர் படையினரால் அணைப்பு
குருநாகல் பொத்துஹெர வடகட முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 2025 ஜூலை 19, அன்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
55 வது காலாட் படைப்பிரிவின் படையலகுகளினால் "தூய இலங்கை" திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான திட்டங்கள்
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்க, 55 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழுள்ள படையலகுகளினால் 2025 ஜூலை 04 ஆம் திகதி சமூகம் சார்ந்த தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இராணுவ படையினரால் நாடளாவிய ரீதியில் டெங்கு தடுப்பு பிரச்சாரம்
54 வது காலாட்படை படைப்பிரிவின் படையினர், "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, 2025 ஜூலை 09 அன்று 541, 542 மற்றும் 543 வது காலாட் பிரிகேடின் கீழ் உள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு திட்டத்தை நடத்தினர். இந்த திட்டம் அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பாடசாலைகளை உள்ளடக்கியது.
51 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மாதகலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டைக் நிர்மாணித்து பயனாளியிடம் 2025 ஜூலை 07 அன்று கையளித்தனர்.
10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியினால் செல்ல கதிர்காமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு
செல்ல கதிர்காமத்தில் 2025 ஜூலை 10 ஆம் திகதி ஏழை குடும்பம் ஒன்றிற்கு ஒரு புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
6 வது இலங்கை கவச வாகன படையணியினால் இரத்த தான திட்டம்
6 வது இலங்கை கவச வாகன படையணியினால் 2025 ஜூலை 08 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் இரத்த தான நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2 வது இயந்திரவியல் காலாட் படையணியினால் கிறிஸ்துவகுளத்தில் உள்ள பிள்ளைகளுக்கு உதவி
2 வது இயந்திரவியல் காலாட் படையணி, 2025 ஜூன் 30 ஆம் திகதி செட்டிகுளம் கிறிஸ்த்துவகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களை வழங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு 'சஹோதரத்வே மனுதாம' ஆதரவு வழங்கியது.