இராணுவ சிறப்பம்சம்
புதிய இராணுவ நிறைவேற்றுபணிப்பாளர் நாயகம் கடமையேற்பு
மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவத்தின் 42 வது நிறைவேற்றுபணிப்பாளர் நாயகமாக 2026 ஜனவரி 27 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழில் இந்திய அமைதி காக்கும் போர்வீரர்களின் நினைவேந்தல்
இலங்கையில் 1987-1990 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்களின் நினைவேந்தல் மற்றும் அவர்களின் தியாகங்கள் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 2026 ஜனவரி 26 பலாலி இந்திய அமைதிப் காக்கும் படை நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டது. யாழில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத்துடன் இணைந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த நிகழ்வை நடாத்தியது.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி கடமையேற்பு
மேஜர் ஜெனரல் கேடீபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஜனவரி 27 ஆம் திகதி யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 34 வது தளபதியாக கடமையை பொறுப்பேற்றார்.
ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை விழா
இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் பிரியாவிடை விழா 2026 ஜனவரி 18 அன்று இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொறியியல் சேவைகள் படையணியின் 17 வது படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு
பொறியியல் சேவைகள் படையணியின் 17 வது படைத்தளபதியாக பிரிகேடியர் வை.கே.எஸ். ரங்கிக்க பீஎஸ்சீ பீடீஎஸ்சீ அவர்கள் 2026 ஜனவரி 19 அன்று பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் பதவியேற்றார்.
ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை விழா
இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் பிரியாவிடை விழா 2026 ஜனவரி 18 அன்று இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் 41 வது ஆண்டு நிறைவு விழா
மாதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலை, அதன் 41 வது ஆண்டு நிறைவு விழாவை 2026 ஜனவரி 14 ஆம் திகதி இராணுவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற தொடர்ச்சியான சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
ஓய்வுபெறும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கு யாழ். படையினரால் பிரியாவிடை
இலங்கை இராணுவத்தில் இருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார அவர்களுக்கு, 2026 ஜனவரி 14 ஆம் திகதி பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில், யாழ். படையினர் சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு
இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜனவரி 15 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது, பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம். பெரேரா அவர்கள் கடமை பொறுப்பேற்றார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் பாரியலவிலான போதைப்பொருள் சுற்றிவளைப்பு
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 ஜனவரி 14 ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, பெரியளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.