சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்ப்பேற்பு

2026-04-05
யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்ப்பேற்பு

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

வெளிச்செல்லும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதிக்கு பிரியாவிடை

2026-04-05
வெளிச்செல்லும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதிக்கு பிரியாவிடை

ஓய்வுபெறும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களைக் கௌரவிக்கும் வகையில், 2026 ஏப்ரல் 02 அன்று பனாகொடையில் உள்ள படையணி தலைமையகத்தில் ஒரு முறைப்படியான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. அவர் 2025 ஜூன் முதல் 2026 ஏப்ரல் வரை 24 வது படைத் தளபதியாக பணியாற்றியதுடன் மேலும், படையணிக்கு அவரது முன்மாதிரியான தலைமைத்துவம், தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புக்காக கெளரவம் செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

வெளிச்செல்லும் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு இராணுவ மரியாதை

2026-04-05
வெளிச்செல்லும் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு இராணுவ மரியாதை

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு, 2026 ஏப்ரல் 03 அன்று, யாழ். பாதுகாப்புப் படைகள் சார்பில் இராணுவ சாம்பிரதாய விழா ஒன்றில் பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 145வது ஆண்டு நிறைவு விழா

2026-04-04
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 145வது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி, அதன் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி தனது 145வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.

மேலும் வாசிக்க

54வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2026-04-03
54வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஜீ.எஸ்.கே. பெரேரா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி மன்னார் 54 வது காலாட் படைப்பிரிவில் நடைபெற்ற மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில், படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

இராணுவ வீரர்கள் உதவியுடன் இரத்தினபுரியில் உள்ள தனியார் கடையில் ஏற்பட்ட தீ அணைப்பு

2026-03-30
இராணுவ வீரர்கள் உதவியுடன் இரத்தினபுரியில் உள்ள தனியார் கடையில் ஏற்பட்ட

2026 மார்ச் 30 அன்று இரத்தினபுரியில் உள்ள கரவிட்ட வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் மின்சாரக் கோளாறால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் வாசிக்க

இராணுவ வீரர் பல செரண்டிப் உலக சாதனைகள் படைப்பு

2026-03-26
இராணுவ வீரர் பல செரண்டிப் உலக சாதனைகள் படைப்பு

14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய் ஆர்.கே.பீ.ஏ.ஆர்.கே. ராஜபக்ஷ 2026 மார்ச் 21 அன்று பதவிய பொது விளையாட்டு மைதானத்தில் செரண்டிப் உலக சாதனைகள் குழுவின் மேற்பார்வையின் கீழ் பல செரண்டிப் உலக சாதனைகளை நிலைநாட்டி இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க பெருமையையும் சிறப்பையும் சேர்த்துள்ளார். அவரது அபாரமான உடல் வலிமை, உறுதிப்பாடு மற்றும் தனித்துவமான திறன்கள், சவாலான தொடர் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.

மேலும் வாசிக்க

வட மாகாண ஆளுநர், யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியை மரியாதை நிமித்தம் சந்திப்பு

2026-03-25
வட மாகாண ஆளுநர், யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியை மரியாதை நிமித்தம

வட மாகாணத்தின் கௌரவ ஆளுநர், திரு. என். வேதநாயகன் அவர்கள், 2026 மார்ச் 23 அன்று யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 28வது ஆண்டு நிறைவு விழா

2026-03-23
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 28வது ஆண்டு நிறைவு விழா

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது 28வது ஆண்டு நிறைவு விழாவை 2026 மார்ச் 18 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.

மேலும் வாசிக்க

இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய கடற்படையினால் தென் கடற்பகுதியில் 250 கிலோ கொக்கைன் பறிமுதல்

2026-03-18
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய கடற்படையினால் தென் கடற்பகுதியில்

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் தென் கடற்பகுதியில், IMULA - A- 1108GLE என்ற பதிவு எண் கொண்ட பிரியங்கா-6 என்ற நெடுநாள் பயணக் கப்பலில் சுமார் 250 கிலோ கொக்கைனுடன் 6 நபர்களைக் கடற்படையினர் கைது செய்தனர். பறிமுதல்செய்யப்பட்ட போதை பொருட்களும் சந்தேக நபர்களும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

மேலும் வாசிக்க