இராணுவ சிறப்பம்சம்
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 13 வது ஆண்டு நிறைவு விழா
மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் தனது 13 வது ஆண்டு நிறைவை 2026 மார்ச் 14 ஆம் திகதி தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
கேகாலையில் இராணுவத்தினரால் காட்டுத்தீ அணைப்பு
572 வது காலாட் பிரிகேட்டின் அறிவுறுத்தலின் பேரில், 8வது இலங்கை சிங்க படையணி படையினரால் 2026 மார்ச் 12 ஆம் திகதி கேகாலை, புவக்தெனிய, நில்வாக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ வெற்றிகரமாகக் அணைக்கப்பட்டது.
கொ பா பல்கலைக்கழக வழங்கல் தினம் 2026 ல் இலங்கை இராணுவ மீள்தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவில் வழங்கல் குறித்த கலந்துரையாடல்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ, சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடத்தின் முகாமைத்துவ மற்றும் நிதித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழங்கல் தினம் 2026 ஐ முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட வழங்கல் தலைமையுடன் ஒரு நேர்காணல் லொஜிஸ்டிக் டைம் இதழில் வெளியிடுவதற்காக 2026 மார்ச் 12 ஆம் திகதி உபகரண பணிப்பாளர் நாயக அலுவலக கலந்துந்துரையாடல் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு
பிரிகேடியர் எஸ்.ஆர். ஹேவாபதிரண எல்எஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 20வது சொத்து முகாமைத்துவ பணிப்பாளராக 2026 மார்ச் 10 அன்று மத அனுஷ்டானம் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
போர் வீரர்கள் கடற்படை சுற்றுலாவில் பங்கேற்பு
இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், ரணவிரு செவன நல விடுதி நிலையம், மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 1, 2, மற்றும் 3 நல விடுதியிலுள்ள போர்வீரர்கள் கடற்படைத் தளபதியின் ஒப்புதலுடன், 2026 மார்ச் 04 ஆம் திகதி காலி தெற்கு கடற்படைத் தளத்திலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலான "லங்கா தேவி"யில் திமிங்கலத்தைப் பார்க்கும் சுற்றுப்பயணத்திற்காக கடற்படை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெவண்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள்
ரம்பொட, கெரன்டிஎல்ல, வெவண்டன் வனப்பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ 3வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் விரைவாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
இராணுவத் தலைமையகத்தில் தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் 10 வது பணிப்பாளராக பிரிகேடியர் பீ.டபிள்யூ.எம்.எம்.டி. விஜேரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மார்ச் 06 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.
51 வது காலாட் படைப்பிரிவு படையினரால் நாகதீப புராண ராஜமஹா விகாரையில் தான நிகழ்வு
51 வது காலாட் படைப்பிரிவு வரலாற்று சிறப்புமிக்க நாகதீப புராண ராஜமஹா விகாரையில் 2026 மார்ச் 01 ஆம் திகதி ஒரு தான நிகழ்வை நடாத்தியது.
முதலாம் படை படையினரால் 2026 க்கான “கோர்ப்ஸ் கிரியேட்டர்ஸ் எக்ஸ்போ” புத்தாக்க போட்டி
இராணுவத் தளபதியின் எண்ணகருவிற்கமைய, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் முதலாம் படை படையினரால் 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இலங்கை இராணுவத்தின் 77 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “நெலும் பியச” கேட்போர்கூடத்தில் “கோர்ப்ஸ் கிரியேட்டர்ஸ் எக்ஸ்போ” என்ற கருப்பொருளின் கீழ் ஒரு புத்தாக்க போட்டி நடத்தப்பட்டது.
57 வது காலாட் படைப்பிரிவின் தனது 19 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.வீ. கொடிதுவக்கு என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி அதன் தலைமையக வளாகத்தில் 57 வது காலாட் படைப்பிரிவு தனது 19 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.