இராணுவ சிறப்பம்சம்
கட்டுசு கொந்த மலையில் காணாமல் போன நபர் இராணுவத்தினரால் மீட்பு
2026 ஏப்ரல் 12 ஆம் திகதி ஹந்தான கட்டுசு கொந்த மலையில் ஏறச் சென்ற ஒருவரை 2 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி மீட்டனர்.
இராணுவ புலனாய் தகவலின் அடிப்படையில் 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா தோட்டம் சுற்றி வளைப்பு
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி ஒரு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை பொறியியல் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள், இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளுக்கு இணங்க, 2026 ஏப்ரல் 04 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் இலங்கை பொறியியல் படையணியின் 25 வது படைத் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழு தலைவர் யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியை சந்திப்பு
கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுத் தலைவி திருமதி அஞ்சலிக் அப்பேரூக்ஸ் அவர்கள் 2026 ஏப்ரல் 08 அன்று யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ வீரரின் நேர்மையான சேவைக்கு பாராட்டு
இலங்கை இராணுவ ஊடக மற்றும் உளவியல் செயல்பாடுகள் பணிப்பகத்தில் பணியாற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.கே.பீ.கே. ரத்நாயக்க புறக்கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில், 80,000 ரூபாய் மற்றும் பல பெறுமதிமிக்க ஆவணங்கள் அடங்கிய தொலைத்த பணப்பையை, அதன் உரிமையாளரான மியன்மார் பௌத்த பிக்குவிடம் 2026 ஏப்ரல் 07 அன்று கொடகம புராண விகாரையில் கையளித்தார்.
பொறியியல் சேவைகள் படையணியின் புதிய படைத்தளபதி பதவியேற்பு
பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம். பெரேரா அவர்கள் 2026 ஏப்ரல் 06 அன்று பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் பொறியியல் சேவைகள் படையணியின் 18 வது படைத்தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
பொறியியல் சேவைகள் படையணியினால் படைத்தளபதிக்கு பிரியாவிடை
பிரிகேடியர் வை.கே.எஸ் ரங்கிக்க பீஎஸ்சீ பீடீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 04 அன்று படையணி தலைமையகத்தில் பொறியியல் சேவைகள் படையணியின் 17 வது படைத்தளபதி பதவியிலிருந்து தனது கடமைகளைத் துறந்தார்.
இலங்கை இராணுவத்தின் புதிய போர் கருவி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு
மேஜர் ஜெனரல் ஏ.எம்.சீ. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில், இலங்கை இராணுவத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.
புதிய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் கே.டீ.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 04 ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 19 வது தளபதியாக கடமை பெறுப்பேற்றார்.
முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் எம்.என்.ஜே. பெரேரா அவர்கள் 2026 ஏப்ரல் 02 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.