இராணுவ சிறப்பம்சம்
இலங்கை இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் எம்.ஆர். ஹமீம் யூஎஸ்பீ அவர்கள் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வில், 11 வது இலங்கை இராணுவ தகவல் தொழில்நுட்ப பணிப்பாளராக 2026 ஜனவரி 02 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் டபிள்யூ.எஸ் ரவிந்தர குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2026 ஜனவரி 01 அன்று கடமைகளை பெறுப்பேற்றார். கடமைகளை ஏற்றுகொண்ட புதிய பணிப்பாளர் படையினருக்கு உரையாற்றினார்.
55 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் எச்.எம்.ஜி.இ. ஹேரத் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் கிளிநொச்சி 55 வது காலாட் படைப்பிரிவின் 30 வது தளபதியாக 2026 ஜனவரி 02 அன்று கடமை பொறுப்பேற்றார்.
11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
பல்லேகலையில் உள்ள 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 29 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ நடவடிக்கைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் எம்.கே.டி.பீ. மாபலகம பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 22 அன்று இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவ நடவடிக்கைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ காலமானார்
பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ 2026 டிசம்பர் 01 அன்று கிரிபத்கொட தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுகவீனம் காரணமாக காலமானார்.
55 வது காலாட் படைப்பிரிவின் 29வது ஆண்டு நிறைவு விழா
55 வது காலாட் படைப்பிரிவின் 29 வது ஆண்டு நிறைவு விழா 2025 டிசம்பர் 15 அன்று கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது.
பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) காலமானார்
பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) 2025 டிசம்பர் 30 அன்று விபத்தில் சிக்கி காலமானார். இறக்கும் போது அவருக்கு 60 வயது ஆகும்.
இலங்கை இராணுவ வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் எஸ்.பீ விக்ரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 29 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவ வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.
அபிமன்சல–1 நலவிடுதியில் நத்தார் தின பிரார்த்தனை மற்றும் பரிசில்கள் விநியோக நிகழ்ச்சி
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்திற்கமைய, அபிமன்சல–1 நலவிடுதியின் தளபதி பிரிகேடியர் யூ.ஆர்.ஐ.பி. ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேராசிரியர் நோர்பர்ட் ஆண்ட்ராடி அவர்களால் 2025 டிசம்பர் 23 ஆம் திகதி அனுராதபுரம் அபிமன்சல–1 நல விடுதியில் உள்ளவர்களுக்காக பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாத நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.