பொறியியல் சேவைகள் படையணியின் 17 வது படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு

பொறியியல் சேவைகள் படையணியின் 17 வது படைத்தளபதியாக பிரிகேடியர் வை.கே.எஸ். ரங்கிக்க பீஎஸ்சீ பீடீஎஸ்சீ அவர்கள் 2026 ஜனவரி 19 அன்று பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் பதவியேற்றார்.

பதவியேற்ற தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் வழங்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலர்வளையம் வைக்கப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர் படைத்தளபதி படையணி அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டதுடன் இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒரு மாங்கன்றினையும் நாட்டினார். அனைத்துப் நிலையினருக்கும் உரையாற்றிய அவர், தனது கட்டளைத் தத்துவத்தைப் பகிர்ந்து கொண்டதுடன் அதிகாரிகளின் தொழில் முன்னேற்றத்தை படையணியின் பணியின் ஒரு மூலக்கல்லாக வலியுறுத்தினார்.

அன்றைய சம்பிரதாய நிகழ்வுகள் தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைடைந்ததுடன் அதைத் தொடர்ந்து படையணி அதிகாரிகள் உணவகத்தில் அனைத்து அதிகாரிகளுடனும் மதிய உணவு வழங்கப்பட்டது.