இராணுவ சிறப்பம்சம்
அபிமன்சல 3 நலவிடுதியின் போர் வீரர்களின் நத்தார் கொண்டாட்டம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அபிமன்சல 3 நலவிடுதியில் 2025 டிசம்பர் 23 ஆம் திகதி நத்தார் தினம் கொண்டாடப்பட்டது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி உயிரியியல் மருத்துவ உபகரண பழுதுபார்ப்பு
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை முழுவதும் உயிரியியல்மருத்துவ உபகரணங்களை பராமரித்து புதுமைப்படுத்துவதன் மூலம் இராணுவத்தின் செயல்பாட்டு தயார்நிலையை தொடர்ந்து உறுதி செய்கின்றனர்.
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் புதிய படைத்தளபதி கடமைகளைப் பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 16வது படைத்தளபதியாக 2025 டிசம்பர் 18 அன்று இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
2025 டிசம்பர் 17 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே வீரகோன் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த கஜமுத்து கைப்பற்றல்
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கையின் போது, 2025 டிசம்பர் 17 ஆம் திகதி குறிப்பிடத்தக்க கைப்பற்றல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசேட படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே வீரசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் விசேட படையணியின் 16 வது படைத் தளபதியாக 2025 டிசம்பர் 15, அன்று விசேட படையணி தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை சமிக்ஞை அதிகாரி பதவியேற்பு
மேஜர் ஜெனரல் கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 16, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 13 வது தலைமை சமிக்ஞை அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பாராட்டு
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து அனர்த்த நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ஒன்றிணைக்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பிரிவுகளின் படையினர் ஆற்றிய முன்மாதிரியான சேவையைப் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் பாராட்டினார். 2025 டிசம்பர் 17 அன்று பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்தப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இராணுவ வழங்கல் கல்லூரியின் புதிய தளபதி கடமைபொறுப்யேற்பு
பிரிகேடியர் டி.ஐ.எஸ். ஜயசிங்க என்டிசி பீஎஸ்சீ அவர்கள் இராணுவ வழங்கல் கல்லூரியின் 12 வது தளபதியாக 2025 டிசம்பர் 15 அன்று மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது போர் கருவி பணிப்பாளர் நாயகமாக இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.