28th January 2026
மேஜர் ஜெனரல் கேடீபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஜனவரி 27 ஆம் திகதி யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 34 வது தளபதியாக கடமையை பொறுப்பேற்றார்.
இந்நாளின் முதல் நிகழ்வாக, புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி, பலாலி போர் வீரர்களின் நினைவுதூபியில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி பின்னர் மஹா சங்க உறுப்பினர்களின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் மதகுருமார்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார். தனது புதிய பணியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், சுப நேரத்தில் அவர் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், அவர் ஒரு மரக்கன்றை நாட்டி, படையினருடன் குழு படம் எடுத்துக்கொண்டார். நிறைவில் யாழ். பாதுகாப்பு படை தலைமையக படையினருக்கு உரையாற்றியதுடன் இலங்கையில் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பேணுவதில் யாழ் குடாநாட்டின் மூலோபாய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான கலாசாரத்தை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் விரிவாகக் கூறினார்.
யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.