புதிய இராணுவ நிறைவேற்றுபணிப்பாளர் நாயகம் கடமையேற்பு

மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவத்தின் 42 வது நிறைவேற்றுபணிப்பாளர் நாயகமாக 2026 ஜனவரி 27 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடமைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நிறைவேற்றுபணிப்பாளர் நாயகம் அவர்கள் கிளையின் அனைத்துப் நிலையினருக்கும் உரையாற்றி எதிர்வரும் காலத்திற்கான தனது எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார்.

இந்த நியமனத்திற்கு முன்பு, சிரேஷ்ட அதிகாரி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியாக பணியாற்றினார்.