இராணுவ சிறப்பம்சம்
57 வது காலாட் படைப்பிரிவு தளபதி கடமைகளை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 57 வது காலாட் படைப்பிரிவின் 20 வது தளபதியாக 2026 மே 04 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
முதலாம் படையினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை
முதலாம் படையின் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபாத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில், முதலாம் படை படையினர் 2026 மே 03 ஆம் திகதி முதலாம் படைத் தலைமையகத்தில் ஒரு சம்பிரதாய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கட்டுபெத்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணிக்கு சர்வதேச தரப்படுத்தல் அமைப்பு 9001:2015 சான்றிதழ்
கட்டுபெத்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அடிப்படைப் பட்டறையானது, இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்திடமிருந்து சர்வதேச தரப்படுத்தல் அமைப்பின் 9001:2015 தர மேலாண்மை அமைப்புச் சான்றிதழைப் பெற்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
விசேட படையணியினால் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலுக்கு பாராட்டு விழா
விசேட படையணியின் மேஜர் ஜெனரல் கே.டி.யூ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வு 2026 மே 02 அன்று விசேட படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
மறைந்த அதிகாரவானையற்ற அதிகாரிக்கு இராணுவ இறுதி மரியாதை
முறிக்கண்டியில் கடந்த 2026 ஏப்ரல் 20 அன்று நிகழ்ந்த புகையிரத விபத்தில் சிக்கி, படுகாயமடைந்து உயிரிழந்த 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் மரியலூஜிசன் அவர்களின் இறுதிச் சடங்குகள், முழு இராணுவ மரியாதையுடன் 2026 மே 01 அன்று கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் உள்ள சாவத்தி பொது மயானத்தில் நடைபெற்றது.
மெனிக்ஹின்ன வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பு
2026 ஏப்ரல் 22 ஆம் திகதி மெனிக்ஹின்ன வியாபார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதனை இராணுவத்தினர் விரைவாக அணைத்தனர்.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி யாழில் மரியாதை நிமித்தமான சந்திப்புக்கள்
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2026 ஏப்ரல் 20 அன்று யாழில் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை மேற்கொண்டார்.
ஜப்பானில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான மரதன் போட்டியில் இராணுவ வீரர் பிரகாசிப்பு
கஜபா படையணியின் சிப்பாய் ஆர்.டபிள்யூ.வீ. பியதிஸ்ஸ அவர்கள் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதி கசுமிகௌராவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான மரதன் போட்டியில் 5 மணி நேரம், 37 நிமிடங்கள் மற்றும் 37 வினாடிகளில் பந்தயத்தை முடித்து 12வது இடத்தைப் பிடித்தார்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி ஸ்ரீ நாக விஹாரைக்கு விஜயம்
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி யாழ்ப்பாண வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நாக விஹாரைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுப்பட்டார். இதன் போது அவர் பிரதம விகாராதிபதியிடம் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.
திகன நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினரால் தற்காலிக அணை
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, மகாவலி ஆற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் கண்டி அரச அதிபர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், திகன பிரதேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 6 வது களப் பொறியியல் படையணி, 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபில் படையணியின் படையினர் 2026 ஏப்ரல் 07 முதல் 11 வரை 5,000க்கும் மேற்பட்ட மண் மூட்டைகளைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக அணையைக் கட்டியுள்ளனர்.