3rd April 2026
மேஜர் ஜெனரல் ஜீ.எஸ்.கே. பெரேரா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி மன்னார் 54 வது காலாட் படைப்பிரிவில் நடைபெற்ற மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில், படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அவர் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தி, குழுப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்டியதுடன், படைப்பிரிவின் படையினருக்கு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்துத் நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.