23rd March 2026
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது 28வது ஆண்டு நிறைவு விழாவை 2026 மார்ச் 18 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
வருகை தந்த தளபதிக்கு 7வது இலங்கை கவச வாகன படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் குழுப் படம் எடுத்துக்கொண்டதுடன், தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்றை நாட்டினார்.
படையினருக்கு உரையாற்றிய தளபதி, அனைத்துத் நிலையினரின் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் பாராட்டினார். அன்றைய நிகழ்வுகளில் அனைத்துத் நிலையினருக்குமான மதிய உணவும் இடம்பெற்றது.
நிகழ்வின் ஒரு பகுதியாக, அனுராதபுர புனித ஸ்ரீ மகா போதி, கந்தசாமி கோவில், புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் வவுனியா ஜும்மா பள்ளிவாசலில் மத ஆசிர்வாத பூஜைகளும் இடம்பெற்றன. அனைத்து நிலையினரின் நல்வாழ்விற்காக ஆசிகளை வேண்டி, முகாம் வளாகத்திற்குள் செத் பிரித் பாராயணமும் நடத்தப்பட்டது. மேலும் இசை மாலை நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.