5th April 2026
ஓய்வுபெறும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களைக் கௌரவிக்கும் வகையில், 2026 ஏப்ரல் 02 அன்று பனாகொடையில் உள்ள படையணி தலைமையகத்தில் ஒரு முறைப்படியான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. அவர் 2025 ஜூன் முதல் 2026 ஏப்ரல் வரை 24 வது படைத் தளபதியாக பணியாற்றியதுடன் மேலும், படையணிக்கு அவரது முன்மாதிரியான தலைமைத்துவம், தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புக்காக கெளரவம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பாதுகாவலர் அணிவகுப்பு, படையணி நினைவுதூபியில் மலர்வளையம் வைத்தல் மற்றும் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை ஆகியவை இடம்பெற்றன. மேலும் அவர், “சாப்பர்களின் எதிர்காலப் பாதை” என்ற தலைப்பில் அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில், தனது 35 ஆண்டுகால சேவையிலிருந்து பெற்ற வியூக ரீதியான நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்டதுடன், அதிகாரிகளுக்கான எதிர்காலப் பணி வழிகாட்டுதலையும் எடுத்துக் காட்டினார்.
அனைத்துத் நிலையினருடனான மதிய உணவுடன் அந்த நாள் நீடித்தது. அந்நாள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்ட முறைப்படியான பிரியாவிடை இரவு விருந்துடன் நிறைவடைந்ததுடன் அவ்விருந்தில், அவரது பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தனது உரையில், அவர் தனது சக பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு மேலும், இலங்கை இராணுவத்தின் மீதான பெருமிதத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.