வட மாகாண ஆளுநர், யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியை மரியாதை நிமித்தம் சந்திப்பு

வட மாகாணத்தின் கௌரவ ஆளுநர், திரு. என். வேதநாயகன் அவர்கள், 2026 மார்ச் 23 அன்று யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் போருக்குப் பிந்தைய காலத்தில் இலங்கை இராணுவம் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளை ஆளுநர் குறிப்பிட்டத்துடன் மேலும், அப்பகுதிக்கு ஆதரவளிப்பதில் ஆற்றிய முக்கியப் பங்கிற்குத் தனது நன்றியைத் தெரிவித்த அவர், முன்னர் இராணுவப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்களை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் பாராட்டினார். அப்பகுதியில் அமைதியையும் இயல்புநிலையையும் நிலைநாட்டியதற்காக இராணுவத்தை அவர் மேலும் பாராட்டியதுடன், எதிர்கால அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தொடர்ச்சியான இராணுவ உதவியையும் அவர் கோரினார்.

இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றினர்.