இராணுவ வீரர்கள் உதவியுடன் இரத்தினபுரியில் உள்ள தனியார் கடையில் ஏற்பட்ட தீ அணைப்பு

2026 மார்ச் 30 அன்று இரத்தினபுரியில் உள்ள கரவிட்ட வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் மின்சாரக் கோளாறால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

11 வது கெமுனு படையணி படையினர் ,இரத்தினபுரி பொலிசார், இரத்தினபுர தீயணைப்புப் படை மற்றும் அப்பகுதி மக்களின் கூட்டு முயற்சியால் தீ வெற்றிகரமாகக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.