5th April 2026
கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சாம்பிரதாய விழாவில், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையொப்பமிடுதல் மற்றும் அவரது புதிய பொறுப்புகளுக்கான ஆசீர்வாதங்களைப் பெறும் மதச் சடங்குகள் அனுசரிக்கப்படுதல் ஆகியவை இடம்பெற்றன.