இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 145வது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி, அதன் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி தனது 145வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.

இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2026 மார்ச் 29 ஆம் திகதி சந்த செவன முதியோர் இல்லத்தில் தூய்மையாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி போதி பூஜை நடாத்தப்பட்டதுடன், அனைத்துத் நிலையினருக்குமான மதிய உணவு 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.