2026-05-03

விசேட படையணியினால் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலுக்கு பாராட்டு விழா

விசேட படையணியின் மேஜர் ஜெனரல் கே.டி.யூ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வு 2026 மே 02 அன்று விசேட படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

வருகை தந்த ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு, நுழைவாயிலில் இராணுவ பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து கௌரவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஓய்வுபெறும் அந்த சிரேஷ்ட அதிகாரி போர்வீரர் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அந்நாளின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவர் குழுப் படம் எடுப்பதற்கும் அழைக்கப்பட்டதுடன் படையினருக்கு உரையாற்றினார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் நிகழ்வின் உத்தியோகபூர்வ நடைமுறைகள் தொடர்ந்தன.

அன்றைய நிகழ்வுகள், 1வது விசேட படையணியின் அதிகாரிகள் விடுதியில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்பிரதாய பிரியாவிடை இரவு விருந்துடன் நிறைவடைந்தன.

படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.