முதலாம் படையினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை
முதலாம் படையின் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபாத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில், முதலாம் படை படையினர் 2026 மே 03 ஆம் திகதி முதலாம் படைத் தலைமையகத்தில் ஒரு சம்பிரதாய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, அவர் வந்தடைந்ததும் 3வது கஜபா படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அந்த நாளுக்கு மேலும் நினைவுகளைச் சேர்க்கும் விதமாக, பதவி விலகும் தளபதி குழுப் புகைப்படம் எடுக்க அழைக்கப்பட்டார். அனைத்துத் தரப்பினருக்கும் ஆற்றிய தனது உரையில், தனது பதவிக்காலத்தில் அனைத்துத் தரப்பினரும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
அன்றைய நிகழ்வுகள் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துடன் நிறைவடைந்தன. இது, பதவி விலகும் தளபதி அனைத்துத் நிலையினருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.