மறைந்த அதிகாரவானையற்ற அதிகாரிக்கு இராணுவ இறுதி மரியாதை
முறிக்கண்டியில் கடந்த 2026 ஏப்ரல் 20 அன்று நிகழ்ந்த புகையிரத விபத்தில் சிக்கி, படுகாயமடைந்து உயிரிழந்த 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் மரியலூஜிசன் அவர்களின் இறுதிச் சடங்குகள், முழு இராணுவ மரியாதையுடன் 2026 மே 01 அன்று கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் உள்ள சாவத்தி பொது மயானத்தில் நடைபெற்றது.
விபத்தைத் தொடர்ந்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
அவர் 2014 ஜூன் 01 அன்று இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டார்.
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உறவினர்கள் மறைந்த அதிகாரவானையற்ற தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.