மெனிக்ஹின்ன வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பு
2026 ஏப்ரல் 22 ஆம் திகதி மெனிக்ஹின்ன வியாபார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதனை இராணுவத்தினர் விரைவாக அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர், தீயணைப்புப் படை மற்றும் இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக தீ அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவர்களின் விரைவான செயற்பாட்டினால், வியாபார நிலையத்தின் அருகிலுள்ள கட்டிடங்களுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால், ஏற்படக்கூடிய அதிக சேதங்கள் குறைந்து, பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு காப்பாற்றப்பட்டது.