2026-04-21

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி யாழில் மரியாதை நிமித்தமான சந்திப்புக்கள்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2026 ஏப்ரல் 20 அன்று யாழில் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை மேற்கொண்டார்.

இந்த சந்திப்புகளின் போது, அவர் வட மாகாண கௌரவ ஆளுநர் திரு. என். வேதநாயகன், யாழ் மாவட்டச் செயலாளர் திரு. எம். பிரதீபன் மற்றும் யாழ் பேராயர் வண. ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் ஆகியோரை அவர்களுடைய பணியிடங்களில் சந்தித்தார்.