57 வது காலாட் படைப்பிரிவு தளபதி கடமைகளை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 57 வது காலாட் படைப்பிரிவின் 20 வது தளபதியாக 2026 மே 04 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியை சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றதுடன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தளபதி அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன், எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையையும் எதிர்பார்ப்புகளையும் விளக்கினார்.
அனைத்துத் நிலையினருடனான தேநீர் விருந்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.