செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை இராணுவத்தின் 75 ஆண்டு நிறைவை கொண்டாடும் மிஹிந்து செத் மெதுர இசை நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் நிமித்தம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 2024 ஒக்டோபர் 08 ம் திகதியன்று 'மிஹிந்து செத் மெதுர' நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டு போர்வீரர்களை நலன்விசாரித்தனர்.
75வது இராணுவ ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு இரவு முழுவதுமான பிரித் பராயணம் மற்றும் தானம்

எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இறுதி சமய நிகழ்வாக இரவு முழுவதுமான பிரித் பாராயண நிகழ்வு 2024 ஒக்டோபர் 5 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் விசேட ஆராதனை

எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கொழும்பு ஆயர் வண. மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பல முக்கிய பேராயர்களின் பங்குபற்றலுடன் ஒக்டோபர் 4 ஆம் திகதி மாலை சிறப்பு ஆராதனை நடைப்பெற்றது.
இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவி நிலை பிரதனியை சந்திப்பு

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்.எம் அவர்கள் 03 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் பதவி நிலை பிரதனி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
75 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு ஜும்மா பள்ளிவாசலில் 'கிராத்' ஓதுதல்

எதிர்வரும் 75 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்களின் தொடர்ச்சியாக இராணுவத்தின் இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இன்று (3) காலை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் விசேட துவா பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
இராணுவ தினத்தை முன்னிட்டு இந்து ஆசீர்வாத பூஜை

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இந்து பாரம்பரியத்தின் விஷேட ஆசீர்வாத பூஜை 02 ஒக்டோபர் 2024 அன்று கொழும்பு 6, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
கதிர்காமம் கிரிவெஹெரவில் கொடிகளுக்கு ஆசிர்வாதம்

ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புனித கதிர்காமம் கோவில் மற்றும் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி சமய நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
கோதமீகமவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

கதிர்காமம் கோதமீகமவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீடொன்றை 20 வது இலங்கை சிங்க படையணியால் நிர்மணிக்கப்பட்டது. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூடி நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 30 செப்டம்பர் 2024 அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அந்தக் குடும்பத்திற்கு கையளித்தார்.
75வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ தலதா மாளிகையில் இராணுவத்தின் கொடிகளுக்கு ஆசிர்வாதம்

நடைபெறவுள்ள இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இரண்டாவது பௌத்த சமய நிகழ்வு இன்று (28) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது. மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.