செய்தி சிறப்பம்சங்கள்

Clear

இராணுவத் தளபதி அபிமன்சல-1க்கு விஜயம்

2024-09-27

எதிர்வரும் இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் அனுராதபும் அபிமன்சல - 1 நல விடுதியில் புனர்வாழ்வு பெற்றுவரும் போர்வீரர்களை பார்வையிடும் நோக்கத்துடன் விஜயம் மேற்கொண்டனர்.


படையணிகளுக்கு இடையிலான 2024 இராணுவ ஜூடோ போட்டியில் கஜபா படையணி சாம்பியன்

2024-09-26

2024 இராணுவ படையணிகளுக்கிடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசு வழங்கும் விழா 25 செப்டம்பர் 2024 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைப்பெற்றது.


புதிய இராணுவ பதவி நிலை பிரதானி இராணுவத் தளபதியை சந்திப்பு

2024-09-18

மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 16 செப்டம்பர் 2024 அன்று புதிய பதவி நிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார். கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், புதிய இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 18 செப்டம்பர் 2024 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பணியாற்றினார். தற்போதை அவர் தனது பதவிக்கு மேலதிகமாக, இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியாகவும் பணியாற்றுகிறார்.


ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்புமிக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2024-09-18

58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் 18 செப்டம்பர் 2024 அன்று குடும்ப உறுப்பினர்களுடன் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


புதிய இராணுவ பதவி நிலை பிரதானி இராணுவ தலைமையகத்தில் பதவியேற்பு

2024-09-18


ஓய்வுபெறும் பதவி நிலை பிரதானிக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2024-09-11

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2024 செப்டெம்பர் 11 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2024-09-10

இராணுவத் தலைமையகத்தின் தலைமைக் களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எம்பீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் 09 செப்டம்பர் 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.


இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் முகாமைத்துவ சபை கூட்டம்

2024-09-07

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் முகாமைத்துவ இக்கூட்டமானது 06 செப்டம்பர் 2024 அன்று இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிக்கள் குழு பதவி நிலை பிரதானியை சந்திப்பு

2024-09-02

பிரிகேடியர் சலில் பாண்டே தலைமையிலான இந்திய இராணுவ தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறி - 84 இன் நான்கு பேர் கொண்ட குழுவினர், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். பிரிகேடியர் தபஸ் குமார் மிஸ்ரா, ஏர் கொமடோர் ராமச்சந்திர வெங்கடேஸ்வர பிரகாஷ் மற்றும் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி ஆகியோர் இந்த குழுவில் வருகை தந்திருந்தனர்.


'மித்ர சக்தி' - 10 கூட்டு இராணுவப் பயிற்சி மாதுரு ஓயாவில் நிறைவு

2024-08-24

பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் இறுதி இராணுவப் பயிற்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன்னிலையில் மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.