செய்தி சிறப்பம்சங்கள்

Clear

நெக்ஸ்ட் ஜென் பிரிமியர் லீக் 2024 இல் வெற்றி பெற்ற இலங்கை இராணுவ ஹொக்கி அணிக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2024-11-13

அண்மையில் நடைபெற்ற நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி சாம்பியன்ஷிப் 2024 தொடரில் வெற்றி பெற்ற இலங்கை இராணுவ ஹொக்கி அணியின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் 20 நவம்பர் 2024 அன்று இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டது.


இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி புதிய தலைமையகம் இராணுவத் தளபதியினால் அங்குரார்பணம்

2024-11-12

கொழும்பு மெலே வீதியிலிருந்த (கொம்பனி வீதி) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தின் கொஸ்கம புதிய தளத்தினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் 2024 நவம்பர் 11 அன்று அங்குரார்பணம் செய்யப்பட்டது. இது இலங்கை இராணுவத்தின் மறுசீரமைப்பு முயற்சியில் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தை திறமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட குறைந்த படையாக மாற்றுவதன் ஒரு திட்டமாகும்.


பொப்பி மலர் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

2024-11-08

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதி குழுவினரால் உயிர் நீத்த உலக போர் வீரர்களை நினைவுகூறும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு இன்று (07) முற்பகல் இராணுவத் தளபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.


இஸ்ரேல் தூதரக பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தம் சந்திப்பு

2024-11-06

புதுடெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரும், இலங்கைக்கான பாதுகாப்பு இணைப்பாளருமான கேணல் அவிஹாய் சப்ராணி அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை செவ்வாய்க்கிழமை (5) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


துருக்கி தூதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

2024-10-25

இலங்கைக்கான துருக்கி தூதுவர் அதிமேதகு செமித் செமிஹ் லுட்பு துர்குட் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 25 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.


ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2024-10-18

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் 35 வருட கால சிறப்புமிக்க பணியின் பின்னர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 18 ஒக்டோபர் 2024 அன்று தனது குடும்பத்தாருடன் சந்தித்தார்.


இந்திய தூதுக்குழுவினர் பதவி நிலை பிரதானியை சந்திப்பு

2024-10-14

இந்தியா பாதுகாப்பு நிர்வாக கல்லூரியின் கேணல் கேதர் தத்தாத்ரயா குப்தே, (தூதுக்குழுவின் தலைவர்), குறூப் கெப்டன் திபேந்திர படோரியா, கேணல் குணால் ரமேஷ் லோனாரி மற்றும் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி ஆகியோர் 2024 ஒக்டோபர் 14 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தனர்.


இராணுவ தினத்தை முன்னிட்டு தோழர்களிடையே கூட்டுறவு இராபோசணம்

2024-10-11

இராணுவ தினத்தை முன்னிட்டு பனாகொடை இராணுவ முகாம் வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (10 ஆம் திகதி) இலங்கை இராணுவத்தினரிடையே தோழமையை வளர்க்கும் நோக்கத்துடன் விசேட நட்புணர்வு இரவு உணவு விருந்து நடைபெற்றது. இந்த வருடாந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், 25 படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.


75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் சிறப்பு முத்திரை வெளியீடு

2024-10-10

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் தபால்தலைகள் பணியகத்தினால் விசேட நினைவு முத்திரையொன்று வியாழக்கிழமை (10) வெளியிடப்பட்டது. இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வானது பனாகொடவில் உள்ள இராணுவ முகாம் வளாகத்தில், இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற பிரதான நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்றது.


இராணுவத் தளபதியின் இராணுவ தினச் செய்தி

2024-10-10

நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் தீவிரமாக பங்களிக்கும் அதேவேளை, தேசத்தைப் பாதுகாப்பதில் இலங்கைப் படையினர் தொழில் ரீதியாகவும் செயற்பாட்டில் இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி தனது 75ஆவது இராணுவ தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.