இலங்கை இராணுவத்தின் 75 ஆண்டு நிறைவை கொண்டாடும் மிஹிந்து செத் மெதுர இசை நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி

9th October 2024

‍இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் நிமித்தம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 2024 ஒக்டோபர் 08 ம் திகதியன்று 'மிஹிந்து செத் மெதுர' நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டு போர்வீரர்களை நலன்விசாரித்தனர்.

வருகை தந்த இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகிய இருவரையும் மிஹிந்து செத் மெதுர நலவிடுதியின் போர்வீரர்கள் மரியாதையுடன் வரவேற்றனர்.

நிகழ்ச்சியின் போது, நலவிடுதியின் 75 போர்வீரர்கள், இராணுவ இசைக்குழுவுடன் இணைந்து பிரபல இசை நட்சத்திரங்களின் இசையை ரசித்து மகிழ்ந்தனர். இதன் போது நகைச்சுவை நிகழ்வு மற்றும் சக்கர நாற்காலி நடனங்களுடன் மிஹிந்து செத் மெதுர’ நலவிடுதியின் மகிழ்ச்சி மற்றும் ஆற்றலுடன் ஆண்டு விழா இடம் பெற்றது.

‍இராணுவத் தளபதி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இரவு உணவு விருந்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

‍இந் நிகழ்வில் பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.