கோதமீகமவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

1st October 2024

கதிர்காமம் கோதமீகமவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீடொன்றை 20 வது இலங்கை சிங்க படையணியால் நிர்மணிக்கப்பட்டது. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூடி நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 30 செப்டம்பர் 2024 அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அந்தக் குடும்பத்திற்கு கையளித்தார்.

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பாராட்டத்தக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியுதவியை கொழும்பைச் சேர்ந்த திரு.ஷோன் வென்டோர்ட் அவர்கள் வழங்கினார். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் 12 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 121 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 2 வது சிங்க படையணி கட்டளை அதிகாரியின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டத.

இந்நிகழ்வில் பதவி நிலை பிரதானி அவர்கள் பயனாளிக்கு வசதியான வாழ்விடம் இருப்பதை உறுதிசெய்ததுடன் குடும்பத்திற்கு தேவையான தளபாடப் பொருட்களைக் கையளித்தார். பின்னர் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன் அன்றைய நிகழ்வு நிறைவுற்றது.

இந்நிகழ்வில் மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதிகள், இலங்கை இராணுவத்தின் இராணுவ செயலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.