இஸ்ரேல் தூதரக பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தம் சந்திப்பு
6th November 2024
புதுடெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரும், இலங்கைக்கான பாதுகாப்பு இணைப்பாளருமான கேணல் அவிஹாய் சப்ராணி அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை செவ்வாய்க்கிழமை (5) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அவர்களின் கலந்துரையாடல்களின் போது, இஸ்ரேல் பாதுகாப்பு இணைப்பாளர், இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட பரஸ்பர புரிந்துணர்வு வலிமையை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக இராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவ பரிமாற்றம், ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த உரையாடல் வலியுறுத்தியது.
நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதி, கேணல் அவிஹாய் சப்ராணி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார்.