பொப்பி மலர் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு
8th November 2024
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதி குழுவினரால் உயிர் நீத்த உலக போர் வீரர்களை நினைவுகூறும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு இன்று (07) முற்பகல் இராணுவத் தளபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) அவர்கள், இவ்வருடத்தின் நிகழ்வுகளின் ஆரம்பத்தை அடையாளப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதிக்கு பொப்பி மலரை அணிவித்தார். இராணுவத் தளபதி, பொப்பி நிதிக்கு பங்களிக்கும் வகையில் நன்கொடை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் உறுப்பினர்கள் சமீபத்திய முன்னாள் படைவீரர் சஞ்சிகையின் பிரதியை இராணுவத்திற்கு வழங்கினர்.
பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் பிரதிநிதிகளுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதுடன், அனைத்து முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக அவர்களின் தற்போதைய நலத்திட்டங்களை குறித்து கேட்டறிந்தார். இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் செயலாளர் கேணல் சுஜித் ஜயசேகர (ஓய்வு), பொப்பி குழுவின் உப தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே (ஓய்வு) மற்றும் பொப்பி கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.