துருக்கி தூதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

25th October 2024

இலங்கைக்கான துருக்கி தூதுவர் அதிமேதகு செமித் செமிஹ் லுட்பு துர்குட் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 25 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பல தசாப்தங்களாக நீடித்து வரும் துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் உட்பட பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியமான வழிகள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

நட்புரீதியான உரையாடலின் இறுதியில் நிகழ்வை நினைவுகூரும் வகையில் நல்லெண்ணத்தின் அடையாளமாக அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தூதுவர் கருத்துக்களை பதிவிட்டார். இராணுவத் தளபதி மற்றும் தூதுவருக்கு இடையில் விசேட நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிகொள்ளப்பட்டன.