பட விவரணம்
படையினரின் பங்களிப்புடன் புத்தாண்டு நிகழ்வு

நாட்டின் மிகப்பெரிய சேவை வழங்குனரான இலங்கை இராணுவத்தின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னெடுக்கும் நிமித்தம் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் பனாகொடை இராணுவ வளாகத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) ம் திகதி வழக்கமான நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் பெற்றன.
புத்தாண்டினை முன்னிட்டு கஜபா படையணி தலைமையகத்தில் பண்டிகை பொருட்கள் விற்பனை

இராணுவ தளபதியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை (7) காலை கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் புத்தாண்டு கண்காட்சியினை சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் ஆரம்பித்து வைத்தனர்.
வன்னியில் முப்படையினர் மற்றும் பொலிஸாரை சந்தித்த ஜனாதிபதி தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து விளக்கம்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சனிக்கிழமை (1) புனித நகரமான அனுராதபுரத்திற்கான சுற்றுப்பயணத்தின் போது, வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்கள் அனைவரையும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு அழைத்த பின்னர் கலந்துரையாடினார்.
இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் மாலி படைக்குழுவின் மேலதீக படையினருக்கு நம்பிக்கையினை வழுப்படுத்தும் ஐ.நா முன்பணி குழு

தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியமற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள் போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயர் நிலையினை மதிப்பீடு செய்தவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.
கொமாண்டோ படையணியின் 350 சிப்பாய்கள் தேசத்தின் பணிக்காக

இராணுவத்தின் கொமாண்டோ படையணியில் நடைபெற்ற ஒரு விழாவின் போது அவர்களின் புதிய 265 'கபில தொப்பிகள்' மற்றும் 85 'நீண்ட இலக்கு ரோந்து ' வீரர்களின் விடுகை அணிவகுப்பு புதன்கிழமை (மார்ச் 15) குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
பனாகொடவில் இராணுவ அணிநடை மற்றும் அணிநடை கோது பரிசளிப்பு விழாவிவை கண்டு கலித்த மாணவர்கள்

இராணுவத்தினருக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி - 2022 இன் பரிசளிப்பு விழா இன்று மாலை (14 செவ்வாய்க்கிழமை) பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிவகுப்பு சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.
ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான 14 வது இலங்கை குழு லெபனான் செல்ல தயார் நிலையில்

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் பணிக்காக இலங்கையின் 14 வது குழு, புறப்படுவதற்கு முன்னர் புதன்கிழமை (28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு பனாகொடை இலங்கை பீரங்கி படையணியின் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையை வழங்கியது.
இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 6 வது வருடாந்த கல்வி அமர்வுகளில் அதிமேதகு ஜனாதிபதி பங்கேற்பு

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 6 வது வருடாந்த கல்வி அமர்வு வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 24) மாலை இராணுவ சிவில் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் முகமாக “நெருக்கடியான காலங்களில் இராணுவ மருத்துவத்தின் பங்களிப்பு” என்ற கருப்பொருளில் அத்திடியவில் உள்ள ஈகிள்ஸ் லேக்சைட் ஹோட்டலில் மருத்துவ ஆலோசகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இராணுவ மருத்துவம் தொடர்பான நிபுணர்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ‘விரு சிசு பிரதீபா’ கட்டம்-2 ல் 100 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘விரு சிசு பிரதீபா’ புலமைப்பரிசில் திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் மறைந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் வியாழக்கிழமை (பெப்ரவரி 23) தலா ரூ. 25,000 பெறுமதியான மேலும் 100 புலமைப்பரிசில்களை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கப்பட்டது.
இலங்கை கவச வாகன படையணியின் ‘வர்ண இரவு’

இராணுவத்தின் குதிரைப்படை வீரர்களின் தனித்துவமான விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் இலங்கை கவச வாகன படையணி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வர்ண இரவு’ திங்கட்கிழமை (20) மாலை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.