இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 6 வது வருடாந்த கல்வி அமர்வுகளில் அதிமேதகு ஜனாதிபதி பங்கேற்பு
25th February 2023
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 6 வது வருடாந்த கல்வி அமர்வு வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 24) மாலை இராணுவ சிவில் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் முகமாக “நெருக்கடியான காலங்களில் இராணுவ மருத்துவத்தின் பங்களிப்பு” என்ற கருப்பொருளில் அத்திடியவில் உள்ள ஈகிள்ஸ் லேக்சைட் ஹோட்டலில் மருத்துவ ஆலோசகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இராணுவ மருத்துவம் தொடர்பான நிபுணர்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் அழைப்பின் பேரில் கௌரவ அதிதியாக பேராசிரியர் செல்வநாயகம் நிர்த்தனன் கலந்துகொண்டார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழு தலைமை அதிகாரியுமான திரு.சாகல ரத்நாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கீதம் இசைத்தல், வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் மங்கள விளக்கேற்றல் போன்ற சம்பிரதாயங்களுக்குப் பின்னர் அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
விழாவின் ஆரம்ப உரையை இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் தலைவர் எயார் கொமடோர் என்.டி.பி.அபேசேகர நிகழ்த்தினார். மூன்று நாள் அமர்வுகளில் அவர் நடைமுறை வழிகாட்டுதல்களின் வளர்ச்சியைப் பற்றியும் 2016 இல் கல்லூரி ஆரம்பித்தனையும் நினைவு கூர்ந்தார்.
பின்னர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உரையாற்றியதுடன் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் சிறு உரையொன்றையும் நிகழ்த்தினார்.
150 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத் துறைகளுடன் தொடர்புடைய பிற கல்லூரிகளிலிருந்தும் பதிவு செய்துள்ளனர். இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த கல்வி அமர்வுகளின் போது ஏற்பாட்டாளர்கள் தங்கள் பயனுள்ள கலந்துரையாடல்களைத் தொடரவும் நிபுணத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளுடன் பங்களித்து மேம்படுத்தவும் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி என்பது இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் மருத்துவ மற்றும் பல் மருத்துவர்களைக் கொண்ட ஒரு தொழில்முறை அமைப்பாகும். இது சுமார் 400 மருத்துவர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிபுணத்துவ அமைப்புகளில் ஒன்றாகும். இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அதன் உறுப்பினர்களில் அனைத்து இராணுவ ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவர்களும் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் சகோதரத்துவத்தின் அடிப்படையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவம் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இராணுவ மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதற்கு கல்லூரி விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது.