Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2024 18:34:40 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்புமிக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

ஓய்வுபெற்று செல்லும் 56 வது காலாட் படைபிரிவின் முன்னாள் தளபதியும் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் மேஜர் ஜெனரல் எச்ஜீபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பை ஏற்று செவ்வாய்க்கிழமை (13) அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

34 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரியான இவர் விரைவில் ஓய்வு பெறவுள்ளார். இந்த சந்திப்பின்போது இராணுவத் தளபதி அவரது குறிப்பிடத்தக்க சேவை மற்றும் பல்வேறு பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியமைக்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி போரில் துப்பாக்கி ஏந்திய அதிகாரியாகவும், போருக்குப் பிந்தைய சூழ்நிலையிலும் அவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பு கடமைகளை தளபதி நினைவு கூர்ந்தார்.

இராணுவத் தளபதி, அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டதுடன், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களைக் கேட்டறிந்து, அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இராணுவத்தில் இருந்து வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியின் கடமைக்கு குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளைச் செய்வதில் கிடைத்த ஊக்கத்தைக் குறிப்பிட்டார். கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மேஜர் ஜெனரல் எச்ஜீபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு பாராட்டுக்களின் அடையாளமாக சிறப்பு நினைவுச்சின்னம் மற்றும் குடும்பத்தாருக்கு சிறப்பு பரிசும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:

மேஜர் ஜெனரல் எச்ஜீபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 1989 ஜூலை 14 ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி இல. 32 இல் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் நிறைவு செய்து இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பீரங்கிப் படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது சேவையின் போது படிப்படியாக நிலை உயர்தப்பட்ட அவர் 03 ஆகஸ்ட் 2022 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்தார். அவர் 16 வது குழு தலைவர், 6 வது கள இலங்கை பீரங்கி படையணி, இராணுவ பயிற்சி பாடசாலையின் அணி தலைவர், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 15 வது குழு தலைவர் 6 வது கள இலங்கை பீரங்கி படையணி, 14 வது குழு கெப்டன் 6 வது கள இலங்கை பீரங்கி படையணி, பீரங்கி பிரிகேட்டின் பொது பணி அதிகாரி 3 (செயல்பாடுகள்), 16 வது குழு கெப்டன் 6 வது கள இலங்கை பீரங்கி படையணி, 23 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), பீரங்கி பிரிகேடின் பிரிகேட் மேஜர், 11வது பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி,மினுஸ்மா ஹட்டி ஐநா நடவடிக்கை படைக் குழுவின் பதில் குழு தளபதி, நடவடிக்கை பணிப்பகத்தின் ஐநா கிளை பொது பணி அதிகாரி 1, 8வது நடுத்தர பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி, பயிற்சி பணிப்பகத்தின் பொதுப் பணி அதிகாரி 1 (பயிற்சி), அபேய் தென் சூடான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் பாதுகாப்பு பணியின் பணி நிலை அதிகாரி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி, கல்வி அமைச்சின் பணிப்பாளர் (விளையாட்டு), 592 வது பிரிகேட்டின் பதில் பிரிகேட் தளபதி, இலங்கை பீரங்கி படையணியின் நிலைய தளபதி மற்றும் பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

போர்காலத்தில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சுர பதக்கம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

அவரது இராணுவ வாழ்க்கையில் பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி, படையலகு அதிகாரிகள் ஆதரவு ஆயுத பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணி நிலை பாடநெறி, பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி– இந்தியா, அறிமுக அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் இலக்கு கையகப்படுத்தல் பாடநெறி – இந்தியா, இந்தியாவின் மேம்படுத்தபட்ட துப்பாக்கி சுடுதல் பாடநெறி, இந்தியா நீண்டகால மேம்படுத்தபட்ட துப்பாக்கி சுடுதல் பணி நிலை பாடநெறி, சீனா பீரங்கி படையலகு கட்டளை பாடநெறி மற்றும் பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு பாடநெறி. உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை முடித்துள்ளார். அத்துடன், அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அனர்த்த பகுப்பாய்வு, முகாமை மற்றும் தணி நடவடிக்கை பாடநெறியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.