Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th February 2024 15:34:50 Hours

55 வது காலாட் படைப்பிரிவினரால் கிளிநொச்சியில் மாபெரும் கலாசார நிகழ்வு

76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட மக்களுடனான வலுவான பிணைப்பைப் மேம்படுத்தும் நல்லெண்ணச் செயலாக 55 வது காலாட் படைப்பிரிவினால் 04 பெப்ரவரி 2024 இரணைமடு 'நெலும் பியச' கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்வின் போது 103 மாணவர்களுக்கு பாடசாலைப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலில் 55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

'புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலாசாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. பூநகரின் சரவணபொய்கை நடனக் கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலை, இலங்கை இராணுவ நடனக் குழு மற்றும் இலங்கை சிங்கப் படையணியின் பாரம்பரிய நடனக் குழுவினர் உட்பட பல்வேறு நடனக் கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார். கலாசார நிகழ்வில் கந்தவெளி, கரைச்சி பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸ் உட்பட பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.

மேலும், பிரதி படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசத்தின் பெருந்திரளான மக்களும் இந்த வண்ணமயமான நிகழ்வைக் கண்டுகளித்தனர்.