Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th February 2024 15:33:50 Hours

நாடளாவிய ரீதியில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் இராணுவத்தினர்

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு (பெப்ரவரி 04) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 511 வது காலாட் பிரிகேட் படையினர் காங்கேசன்துறை கடற்கரையில் பட்டம் விடும் திருவிழாவை நடாத்தினர்.

நிகழ்வின் போது பங்கேற்பாளர்களுக்கு படையினரால் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சிக்கு மேலும் கவர்ச்சியை சேர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, சிறுவர் பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை தேசிய சுதந்திர தினத்தன்று 11 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ஒன்றுக்கூடி தேசிய கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தல் போன்றன நிகழ்வுகளில் பங்குப்பற்றினர். இந்நிகழ்வில் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், 521 வது காலாட் பிரிகேட் படையினர் 11 வது விஜயபாகு காலாட் படையணியுடன் இணைந்து 2024 பெப்ரவரி 04 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிதம்பர கல்லூரி மைதானத்தில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை நடாத்தினர்.

இதன்படி, 14 உள்ளூர் அணிகள் இப்போட்டியில் பங்குபற்றியதுடன், 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கரவெட்டி பிரதேச செயலாளர், வல்வெட்டித்துறை வைத்தியசாலை வைத்தியர்கள், சிதம்பரக் கல்லூரியின் அதிபர், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர்.

இதேவேளை, 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் படையினர், முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 29 குடும்பங்களுக்கு மேலும் 2000 தென்னம் பிள்ளைகளை வழங்கினர்.

முல்லைத்தீவு தென்னை முக்கோண திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்கள் கலந்து கொண்டார்.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலின் கீழ் வெலிகந்த மொனரதென்ன ஆரம்ப பாடசாலை, ஹிங்குராக்கொட வைத்தியசாலை, சிலுமின சேய ரஜமஹா விஹாரை, வாகரை பொது மைதானம், சிங்கபுர மகப்பேறு சிகிச்சை நிலையம் மற்றும் வாகரை வைத்தியசாலை ஆகியவற்றில் 23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் சிரமதானப் பணியை மேற்கொண்டனர். 231, 232, மற்றும் 233 வது காலாட் பிரிகேட்கள், 7 வது இராணுவ பீரங்கி படையணி, 9 இராணுவ பீரங்கி படையணி, 7 வது கெமுனு ஹேவா படையணி, 12 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகிய படையலகுகளின் படையினர் இத்திட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

அதேவேளை, 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, 243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்சிஎஸ் குமாரசிங்க ஆகியோர் இணைந்து சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்வை காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பாடு செய்திருந்தன.

76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் 05 பெப்ரவரி 2024 அன்று தெஹியத்தகண்டிய, உத்தலபுர முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை கௌரவித்து அவர்களை ஆதரவளிக்கும் வகையில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வின் போது, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், படையினர் முதியோர்களுக்கு மதிய உணவு மற்றும் அத்தியாவசிய சுகாதார பொருட்களை வழங்கினர்.

உணர்வுகள் நல்வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 12 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் இசை நிகழ்ச்சி மூலம் முதியவர்களுக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கொண்டு வந்தனர்.

இந்நிகழ்வில் 12 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

கிண்ணியா சுரங்கல் நடவூற்று சுனாமி கிராமத்தில் பொதுமக்களின் பங்கேற்புடன் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் ‘பவர் போய்ஸ் ஊடகத்துடன் இணைந்து 76 வது சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.

அதேவேளை, 5 வது (தொ) இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கந்தளாய் பிரதேச பிரதேசத்திற்குட்பட்ட சூரியபுர கிராம சேவகர் பிரிவின் சித்தாறு மகாவலி ஆற்றங்கரையில் மர நடுகைத்திட்டத்தை மேற்கொண்டனர்.

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அத்திட்டிய ‘மிஹிந்து செத் மெதுர’ நல விடுதியில் வசிக்கும் போர்வீரர்கள், நல விடுதி ஊழியர்களுடன் இணைந்து, 04 பெப்ரவரி 2024 அன்று முகாம் வளாகத்தில் மரம் நடும் திட்டத்தை மேற்கொண்டனர். இத் திட்டத்திற்குத் தேவையான மரங்களை தெஹிவளை பிரதேச செயலகம் வழங்கியது.