Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th February 2024 09:14:13 Hours

582 வது பிரிகேட் படையினரால் 100 மாணவர்களுக்கு உதவி

582 வது காலாட் பிரிகேட் படையினர் ஹொரணை, வவுலகல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் ஆதரவற்ற 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொதிகளை வழங்கும் நலன்புரி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி 582 காலாட் பிரிகேட்டில் பணியாற்றும் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் 50 மாணவர்களுக்கு 2024 ஜனவரி 25 ம் திகதியன்று படையணி வளாகத்தில் இந்த நக்கொடைகள் வழங்கப்பட்டன.

582 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்டபிள்யூஆர் பிரசன்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இந்நிகழ்விற்கு தேவையான நிதியுதவியை வைத்தியர் ஜினாஞ்சல ஷானிகா விஜேகுணசேகர அவர்கள் வழங்கினார்.

பாடசாலை உதவிப் பொதிகளில் 2024 ஆம் கல்வியாண்டுக்குத் தேவையான பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை துணைக்கருவிகளும் அடங்கியிருந்தன. நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகளான வைத்தியர் ஜினஞ்சல ஷானிகா விஜேகுணசேகர, திரு. ரவி பெரேரா, திருமதி கௌசல்யா திலகரத்ன, திரு. உதுலசேகர மற்றும் திருமதி தனுஷ்கா வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.