Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2024 19:42:56 Hours

இந்தியா உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1 ம் படைத் தளபதியை சந்திப்பு

கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் அவர்கள் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 02) 1 ம் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சமூக மேம்பாடு மற்றும் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாகவும் 1ம் படையின் வகிப்பங்கு தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.

இறுதியில், நினைவுப் பரிசுகள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டதுடன், சுமூகமான உரையாடலுடன் நிகழ்வு நிறைவுற்றது. முதலாம் படையின் பிரிகேடியர் பொது பணி ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றார்.