Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2024 11:20:17 Hours

23 வது காலாட் படைப்பிரிவின் 76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம்

23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ஓட்டமாவடி மக்களுடன் இணைந்து 76 வது தேசிய சுதந்திர தினத்தை 04 பெப்ரவரி 2024 அன்று ஓட்டமாவடி நகரத்தில் பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினர்.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வை ஆரம்பிப்பதற்காக, 200க்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்களுடன் ஓட்டமாவடி நகரைச் சுற்றி, கலாசார மற்றும் அழகியல் கலைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, படைப்பிரிவின் தளபதி அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ஓட்டமாவடி களத்தில் கிராம மக்கள் படகோட்டுதல் போட்டியில் பங்கு பற்றியதுடன், 'ஏ விஷன்' உயிர்காப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் களப்பு படகு சேவையை, படைப்பிரிவின் தளபதி ஆரம்பித்து வைத்தார்.

23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசமக்கள் கலந்துகொண்டனர்.