Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2024 11:22:10 Hours

76 வது சுதந்திர தினத்தன்று 211 அதிகாரிகள் மற்றும் 1239 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு

76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2024 பெப்ரவரி 4 இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பரிந்துரையின் பேரில், முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர்களால் இலங்கை இராணுவத்தின் மொத்தம் 211 அதிகாரிகள் (நிரந்தரம் மற்றும் தொண்டர்) சிப்பாய்கள் 1239 (நிரந்தரம் மற்றும் தொண்டர்) வெற்றிடத்தின் அடிப்படையில் அடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, மேஜர் ஜெனரல் நிலைக்கு 02 பிரிகேடியர்களும், பிரிகேடியர் நிலைக்கு 12 கேணல்களும், கேணல் பதவிக்கு 13 லெப்டினன் கேணல்களும், லெப்டினன் கேணல் நிலைக்கு 17 மேஜர்களும், மேஜர் நிலைக்கு 29 கெப்டன்களும் (உபகரண கட்டுப்பாட்டாளர்), 13 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் (உபகரண கட்டுப்பாட்டாளர்) மற்றும் 125 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I நிலைக்கு 49 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலைக்கு 111 பணிநிலை சார்ஜென்களும், பணிநிலை சார்ஜென் நிலைக்கு 135 சார்ஜென்களும், 170 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 364 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும் மற்றும் 330 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் (நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணி) வெற்றிடத்தின் அடிப்படையில் நிலைக்க உயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்ட சிரேஷ்ட பிரிகேடியர்களில் மேஜர் ஜெனரல் பீஎன் கொடல்லவத்த யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் அடங்குவர்.