Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2024 19:26:30 Hours

14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணிக்கு பொறியில் படைப்பிரிவு தளபதி விஜயம்

பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்பீ அவர்கள் 22 ஜனவரி 2024 அன்று மத்தேகொட14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணிக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இராணுவ பாரம்பரியத்தின்படி, 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியின் கட்டளை அதிகாரியால் படைப்பிரிவின் தளபதி வரவேற்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, படைப்பிரிவின் பங்கு மற்றும் பணிகள், நிறுவன கட்டமைப்பு, பயிற்சித் திட்டங்கள், வலிமை, நிர்வாகம் மற்றும் வழங்கல் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய விரிவான விளக்கத்தை கட்டளை அதிகாரி வழங்கினார்.

பின்னர், படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரை நிகழ்தியதுடன் சமகால சூழ்நிலையில் பொறியியல் படையினரின் ஒரு சிறப்புப் பிரிவாக அவர்களின் மதிப்பை மேம்படுத்துவதில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை வலியுறுத்தினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.