Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th January 2024 15:13:48 Hours

11 வது காலாட் படைப்பிரிவினால் ‘இராணுவ இலக்கியம்’ மற்றும் ‘துணிச்சலான வீரர்கள்’ பற்றிய செயலமர்வு

11 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் படையலகு படையினரின் பங்குபற்றலுடன், ‘இலங்கை இராணுவப் போர் இலக்கியம்’ மற்றும் ‘வீரப் பாதுகாவலன்’ என்ற தலைப்பில் நிகழ்காலத்திற்கு ஏற்ற வகையில் முக்கியமான செயலமர்வு பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் புதன்கிழமை (17) ஜனவரி 2024 அன்று நடைபெற்றது.

ரணவிருவா சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.எஸ் சாமிந்த அவர்கள் போர்க்கால அனுபவங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கி, இராணுவ இலக்கியங்களால் பார்வையாளர்களை கவர்ந்தார். மேலும் லெப்டினன் கேணல் டிபீஜிகேபீ டி அல்விஸ் ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 'வீர பாதுகாவலரின்' குணங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 150 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதுடன், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகம் இந்த தகவல் பற்றிய செயலமர்வை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தது.