Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 20:22:59 Hours

22 வது காலாட் படைப்பிரிவு லயன்ஸ் கழகத்துடன் இணைந்து திருகோணமலையில் மருத்துவ முகாம்

22 வது காலாட் படைப்பிரிவு திருகோணமலை லயன்ஸ் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2024 ஜனவரி 13 அன்று மருத்துவ முகாமை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்தனர். இத் திட்டம் கண் சிகிச்சை, உடற்திணிவு அளவிடுதல், இரத்த சீனி சோதனை மற்றும் இரத்த தானம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

சிகிச்சையின் போது அனைத்து இனங்களைச் சேர்ந்த 341 பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதுடன், அதில் 291 நபர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 200 பேர் மூக்கு கண்ணாடிகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும், 50 பங்கேற்பாளர்கள் இரத்த தானம் வழங்கினர்.

திருகோணமலை லயன்ஸ் கழகத்தின் தலைவர் திரு. ரஞ்சன் ஜனரஞ்சன தனது உறுப்பினர்களுடன் இணைந்து, திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் திசாநாயக்க, வைத்தியர் சிந்தியா மற்றும் வைத்தியர் சபானா ஆகியோரின் மருத்துவ ஆலோசனையுடன் இத் திட்டத்தை வழிநடாத்தினார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 221 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) கஜபா படையணி படையினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.